மூங்கில் அரிசி

 

மூங்கில் அரிசி

மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும்.

தினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது.

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்

இந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

மூங்கில் அரிசி பயன்கள்: 1

சர்க்கைரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மாறும்படியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி.

மூங்கில் அரிசி பயன்கள்: 2

மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிரிசி ஆகியவரை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செத்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து தினமும் குடித்து வர. உடல் வலிமையடையும், சக்கரையை நோயை கட்டுப்படுத்தும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 3

இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 4

உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 5 

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.

மூங்கில் அரிசி பயன்கள்: 6

இந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சியை சாப்பிடுவதால் பசியை குறைக்கும், உடலில் ஆற்றலை பெருக்கும்.

மூங்கில் அரிசி கஞ்சி செய்முறை விளக்கம்:-

தேவையான பொருட்கள்:-

1.      மூங்கில் அரிசி1 கப்

2.      பாசிப் பருப்பு¼ கப்

3.      பிரியாணி இலை4

4.      பூண்டு5 பல்

5.      பச்சை மிளகாய்காரத்திற்கு ஏற்ப

6.      கறிவேப்பிலை1 ஈர்க்கு

7.      புதினாசிறிது

8.      கொத்தமல்லிசிறிது

9.      சிறிய வெங்காயம்10

10.   உப்புதேவைக்கு

11.   முந்திரிப் பருப்புசிறிது

12.   ஏலக்காய்2

13.   தேங்காய் பால் 1 கப்

 

மூங்கில் அரிசி கஞ்சி செய்முறை:-

மூங்கில் அரிசியையும், பாசிப் பருப்பையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

பின் குக்கர் அல்லது மண் பாத்திரத்தில் தேங்காய் பால் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, நீரில் ஊற வைத்த அரிசி, பருப்பையும் போட்டு, தேவையான அளவு நீருடன், கஞ்சியாகக் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கியபின், தேங்காய் பாலைச் சேர்த்து குடிக்கலாம்.

https://www.pothunalam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/bamboo-rice-benefits-in-tamil/


Comments