முருங்கை பொடி
முருங்கை பொடி Drumstick leaves powder benefits in tamil:- முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது . மேலும் முருங்கையில் உள்ள அனைத்து பாகங்களும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய ஒரு மருத்துவ பொருளாக விளங்குகிறது . குறிப்பாக முருங்கை பொடியை இப்பொழுது பலவகையான நாட்டு மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்துகின்றனர் . சரி இந்த பதிவில் முருங்கை பொடியை தினமும் சாப்பிடுவதினால் ஏற்படும் சில அற்புத மருத்துவ பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :- முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது . அதாவது விட்டமின் A,B சத்து , இரும்பு சத்து , மினரல் , அமினோ அமிலம் , கால்சியம் , பொட்டாசியம் மற்றும் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் முருங்கையில் நிறைந்துள்ளது . முருங்கை பொடியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டு செல்களில் ஏற்படும் சேதம் , மன அழுத்தம் , உடலில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது . மேலும் உட...