அதிமதுரம்
அதிமதுரம் அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) – உதிர போக்கு நிற்க : கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ஏற்படும் உதிரப் போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் (licorice benefits) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது . எனவே கருவுற்ற பெண்கள் அதிமதுரம் (licorice powder) மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து , 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும் . அதிமதுரம் பொடி – சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம் : சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம் அனைத்து பெண்களுக்கும் பிரசவ காலங்களில் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றுதான் ஆசை படுவார்கள் . இருப்பினும் சிலருக்கு சுகப்பிரசவம் ஆகும் , சிலருக்கு சிசேரியன் சிகிக்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பார்கள் . இருப்பினும் கருவுற்ற பெண்கள் கற்பகாலங்களில் அத...